நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை என்ற பகுதி உள்ளது. இங்கு வல்வில் ஓரி விழாவானது கோலாகலமாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடியில் சிறந்த வில்வித்தை வீரரான வல்வில் ஓரி மன்னனை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது அரசின் சார்பில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ம் தேதியில் நடைபெற்று வருகிறது.

இதனை ஒட்டி இந்த ஆண்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, அரசு துறையின் பணி விளக்கம் கண்காட்சி போன்றவைகள்  அரசாங்கத்தால் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த விழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பில் அந்த பகுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதனால் அந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.