தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  இல்லை எனவும் வழக்கம் போல பள்ளி கல்லூரிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.