தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில கோவில்களில் நடைபெறும் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அந்த திருவிழா நடைபெறும் மார்ச் 11ஆம் தேதி இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.