தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் தக்கலையில் அதிகபட்சமாக 10 cm அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்று வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்தெருந்த நிலையில் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.