டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று ஆர் கே புரம் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு உதவும்  சுகாதார திட்டங்களை கூட ஆம் ஆத்மி கட்சி விட்டு வைக்கவில்லை.

எல்லாவற்றிலும் ஊழல் செய்துள்ளது. அதற்கான தண்டனையை கட்டாயம் அனுபவிப்பார்கள். இந்த முறை கட்டாயம் பாஜக ஆட்சி அமைந்துவிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆட்சி அமைந்ததும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தவும். தற்போது கூட மத்திய பட்ஜெட் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் மட்டும் இளைஞர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்திய வரலாற்றில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.