
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. Whatsapp தன்னுடைய பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது இனி வாட்ஸ் அப் பழைய மொபைல்களில் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் கிக்கேட் மாடல் போன்களை வைத்திருப்போர் இனி அவர்களது மொபைலில் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது. உலகில்0.5 சதவீதம் பேர் மட்டுமே இன்னும் கிக்கேட்டில் இயங்கும் மொபைல்களை பயன்படுத்தி வரும் நிலையில் பல கணக்கு மாறுதல்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற புதிய அம்சங்கள் உட்பட தற்போதைய இயக்க முறைமைகளுக்கு வாட்ஸ் அப்பில் தயாரிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அப்டேட் உள்ளது.