
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராஷ்மிகா ஐந்து ஆண்டு திரையுலக வாழ்க்கையில் ஹைதராபாத், கோவா, கூர்க், மும்பை மற்றும் பெங்களூரு என ஐந்து இடங்களில் சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார் என்று ஒரு மீம் வைரலாகி வருகிறது . இதனைப் பார்த்த ராஸ்மிகா இது உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என பதில் அளித்துள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் இவ்வளவு பாசிட்டிவாக பேசுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
#Rashmika owns 5 luxurious apartments in 5 places
#RashmikaMandanna
pic.twitter.com/9zHBwvPU37
— PJ Explained 𝕏 (@PJExplained07) February 10, 2023