சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி. பாஸ்கரின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் வாரிசு அரசியலை பின்பற்றாமல் ஒரு மாவட்ட தலைவரை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். முன்மொழி கொள்கையில் தாய்மொழிக்கு தான் பிரதான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் திமுக தமிழகத்தில் தமிழ் கற்பதை எதிர்க்கிறார்களா என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி கேட்டார்.

நடிகர் விஜயின் படங்கள் கூட தான் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் முன்மொழி கொள்கை தேவை ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? மும்மொழி கொள்கை பற்றி நடிகர் விஜய் எந்த ஒரு கருத்தையும் சொல்லக்கூடாது. அப்படி அவர் சொல்வதென்றால் தன்னுடைய படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என்று விஜய் முதலில் கூற வேண்டும். ஒரு சாதாரண அரசு பள்ளி மாணவர்கள் இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு அல்லது மலையாளம் கற்றுக் கொண்டால் ஆந்திரா அல்லது கேரளாவில் ஒரு வேலையை பெற முடியும். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல தமிழ்நாடு அரசுதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் காட்டமாக பேசியுள்ளார்.