
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாவுக்கு கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஒரு குழு கண்டறிந்து சொல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சேலம் மாவட்ட மருத்துவ அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது வேப்பூர் பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் பகுதியில் பொதுமக்களிடம் பணத்தை வாங்கி கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து கூறியுள்ளனர்.
இதனால் குழந்தையின் பாலினத்தை கூறிய தென்னரசு, தீனதயாளன் என்பவரது மனைவி அஜிரபி, குமாரபாளையத்தைச் சேர்ந்த எல்லம்மாள் ஆகியோரை அதிகாரிகள் பிடித்து ஸ்கேனிங் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தென்னரசு உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.