கடைகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்களை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். மக்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் சில சமயம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது செய்தித்தாளில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார். மீண்டும் இதே போல் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.