
இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். முக்கியமாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். whatsapp செயலியை தினமும் நாம் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது . அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது வீடியோ காலில் பேசுவோர் எண்ணிக்கையை 32ஆக உயர்த்தியுள்ளது. எனவே இனிமேல் 32 பேர் வரை குழுவாக வீடியோ காலில் பேச முடியும். அதுமட்டுமின்றி வீடியோ காலில் யார் பேசுகிறாரோ அவரின் வீடியோ முதலில் வரும்வகையில் புதிய வசதியையும் வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது.