மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது டெல்லியில் அரசியலில் அனல் பறந்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் 400க்கும் 400 வென்று விட்டோம் என்று திமுக வெடி வெடித்து கொண்டாடி வருகிறது. இந்த பரபரப்பில் அதிமுக தொண்டர்கள் மட்டும் சோகத்தில் இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வங்கி குறைந்து வருகிறது . ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் இறக்கிவிடப்பட்டு தோல்வியை தழுவினார்.

இந்த சூழலில் மீண்டும் அதிமுகவினர் அனைவரும் ஒன்றுபடுவோம் என்ற அறிக்கை மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தை குச்சியை முறியடிப்பது கடினம். இனியும் நாம் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவக்காரியம். தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என்னும் மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாக கொள்வோம்.

நம்முடைய வெற்றியை நாளை சரித்திரம் ஆக்கிட மனமாட்சி மறந்து ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றாகுதலுக்கு காண்போம் என்று குறிப்பிட்டுள்ளார். சசிகலாவும் கிட்டத்தட்ட இதே மாதிரியான நிலைப்பாட்டில் தான் உள்ளார்.  இதுகுறித்து அரசியல் விமர்சனங்கள் கூறுகையில், தியாகத்தை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறும் ஓபிஎஸ் அதிமுகவில் இணைத்தால் எடப்பாடி கை காட்டும் எந்த பதிவையும் ஏற்றுக்கொள்ள ரெடி என்று மறைமுகமாக செய்தி சொல்லி இருக்கிறாராம்.

எனவே ஓபிஎஸ் வேண்டுகோளை இபிஎஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். 2024 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தால் அது தொண்டர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி விடும். இனியும் ஈகோ பார்த்துக் கொண்டிருந்தால் இரட்டை இலைக்காக  விழும் 20% வாக்குகளும் கரைந்து விடும். எனவே எடப்பாடி இது தொடர்பாக தீவிரமாக யோசித்து முடிவு எடுப்பது அவசியம் என்று கூறுகிறார்கள்.