
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்ர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல நடிகர்கள் விரும்புவார்கள். அப்படி இருக்கையில் ஒரே ஒரு நடிகருடன் மட்டும் இனி வாழ்க்கையில் பணிபுரிய மாட்டேன் இயக்குனர் மணிரத்தினம் முடிவெடுத்துள்ளார். இதை சம்பந்தப்பட்ட அந்த நடிகரே கூறியுள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் மனசெல்லாம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு விபத்தில் சிக்கி உடம்பில் தீக்காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிவடைந்த பிறகு மனசெல்லாம் படத்தில் இயக்குனர் இந்த படத்தில் நடித்த முடித்த பிறகு தான் மற்ற படத்தில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் வேறு வழி இல்லாமல் மனசெல்லாம் படத்தில் நடித்த பிறகு மற்ற படங்களில் நடித்தார். அதே நேரத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.
அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய சமயத்தில்தான் ஸ்ரீகாந்துக்கு விபத்து ஏற்பட்டது. அதன்பின் ஆயுத எழுத்து படத்தில் இருந்து விலகிய ஸ்ரீகாந்த் அதற்கான அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டார். அப்போது இவ்வளவு நாள் காத்திருந்தது வீணாகிவிட்டது. நீங்கள் அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்தது என்னை இன்சல்ட் செய்வதற்கு சமம். இனி உங்களுடன் சேர்ந்து ஒரு படத்திலும் பணிபுரிய மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இதனை நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.