
கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா தற்போது அறிவித்துள்ள ஒரு அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கன்வாடி ஆசிரியர்கள் கட்டாயமாக உருது மொழி கற்க வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும்பாலாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வெளியிடப்படும். இந்நிலையில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பெரும் அளவில் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தாலும் முஸ்லிம்கள் அங்கன்வாடி பொறுப்புகளில் வேலைக்கு வரவேண்டும் என்பதாலும் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமயா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. இதற்கு முன்னதாக சித்தராமையா கர்நாடக மாநிலத்தில் கன்னடர்களுக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பில் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கண்டிப்பாக உருது மொழி கற்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். மேலும் தாய் மொழியான கன்னடத்தை விட்டுவிட்டு உருது மொழி கற்க வேண்டும் என்று அறிவித்தது சிறுபான்மையினரை கவர வேண்டும் என்பதற்காகவும் இது மற்ற மதத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக சித்தராமையாவை சாடி வருகிறது.