
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய சேவைகளை பெற நேரில் செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.