
கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளிகளையும் இணை கல்வியாக மாற்றுவதற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆண்கள் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள லயோலோ பள்ளியில் இந்த வருடம் 11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது.
கேரளாவில் உள்ள அனைத்து ஒற்றை பாலின பள்ளிகளையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த புதிய மாற்றத்திற்கு கல்வியாளர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கேரளாவில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் பாதுகாப்பாளர் பாலியல் கல்வியை சேர்ப்பதன் அவசியத்தை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.