இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

அதே சமயம் ஆதார் கார்டுடன் கட்டாயம் மொபைல் எண்ணை இணைத்திருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் பலரும் ஆதார் கார்டில் எந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என அறியாமல் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டுடன் எந்த மொபைல் மற்றும் மின்னஞ்சல் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கு புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முதலில் ஆதாரம் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று எனது ஆதார் விருப்பத்தை கிளிக் செய்து, verify mobile/Aadhar என்பதை கிளிக் செய்து மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரி பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.