இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த ஆதாரை நீங்கள் எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதற்கு நீங்கள் https://myaadhaar.uidai.gov.in/%20genricDownloadAadhaar/en என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று 12 இலக்க ஆதார் எண், OTP நம்பரை குறிப்பிட வேண்டும். இதனை சரிபார்த்து உறுதி செய்த பிறகு ஆதார் பதிவிறக்கம் ஆகும். பிறகு கடவுச்சொல்லை உள்ளிட்டு பயன்படுத்தலாம்.