
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனைப் போலவே இன்று மக்கள் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். வங்கி தொடர்பான சேவைகளுக்கு முன்பெல்லாம் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இருந்த இடத்திலிருந்து கொண்டே ஸ்மார்ட் போன் மூலமாக அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம்.
அதனைப் போலவே தற்போது ஏடிஎம் மையத்திற்கு போகாமலேயே மொபைல் ஆப் மற்றும் நெட் பேங்கிங் இல்லாமலேயே பேங்க் பேலன்ஸ் பார்க்க முடியும். அதற்கு ஆதார் மட்டும் போதும். முதலில் உங்களின் மொபைல் போனிலிருந்து *99*99*1#என்ற நம்பருக்கு டயல் செய்து உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து தான் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். உடனே உங்களுக்கு ஒரு எஸ் எம் எஸ் வரும். அதில் உங்களின் பேங்க் பேலன்ஸ் விவரங்கள் அனைத்தும் அனுப்பப்படும்.