
ஏடிஎம் மூலமாகவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை வங்கிக்கு செல்லாமலேயே எடுக்க முடியும். ஷாப்பிங் மால், விமான நிலையங்கள் உட்பட பல இடங்களிலும் வைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு எளிதாக உள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏடிஎம் சேவை பயன்படுத்த வாடிக்கையாளர்களின் நிதி பரிவர்த்தனைகளுக்கு இரண்டு ரூபாய் கூடுதல் கட்டணம் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ஒரு ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதியானது மே 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதியின் படி நிதி பரிவர்த்தனைகள் அதாவது பணம் எடுப்பது போன்றவைக்கு பரிமாற்ற கட்டணம் 17 முதல் 19 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகள் அதாவது இருப்பு விசாரணை அல்லது பிற சேவைகளுக்கு பரிமாற்ற கட்டணம் 6 ரூபாயிலிருந்து ஏழு ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனால் சிறிய வங்கிகள் அதிக இழப்பை சந்திக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.