Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்களை வெளியிடும்.

அந்தவகையில், வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சாட்களை போன்று, சேனலிலும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா.அதுமட்டுமன்றி சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்களை பயனர்கள் தங்களின் ஸ்டேட்டஸில் நேரடியாக பதிவிடும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்களை தருவதால் வாட்ஸ்அப் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.