இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது. நேற்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பெருமையை பாராட்டி பலரும் twitter பதிவு வெளியிட்ட வரும் நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலையில் கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், பூமிக்கும் நிலவுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இந்தியா. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என்ற வரிசையில் இனி இந்தியாவை எழுதாமல் யாரும் கடக்க முடியாது. நிலாவத்தான் நாம கையில் புடிச்சோம், இந்த லோகத்துக்காக இது போதாது நிலா வெறும் துணைக்கோள் நாம் வெற்றி பெற ஒரு விண்ணுலகமே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.