
பல்கலைக்கழகம் மானிய குழுவான யுஜிசி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பட்டப்படிப்பு தன்மை குறித்த உண்மை தன்மை சான்றிதழ்களை வழங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அரசு பணி மற்றும் உயர் பணிகளில் நியமிக்கப்படும்போது இந்த சான்றிதழ் தேவைப்படும்.
இந்த சான்றிதழ் தேவைப்படும் பட்சத்தில் அதற்காக விண்ணப்பிப்பவர்கள் 1000 ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் தற்போது இந்த கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.