மோசமான சாலைகள் இருந்தால் அதற்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும் தான் சுங்க கட்டணம் வசூல் செய்ய வேண்டும். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் உள்ள சுங்க சாவடிகள் கட்டணம் வசூல் செய்யக்கூடாது.

குண்டும், குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலித்தால் மக்களுடைய கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறியுள்ளார்.