
பொதுவாக சுற்றுலா என்று பலரது நினைவிற்கும் சட்டென மாலத்தீவு நினைவுக்கு வந்துவிடும். ஏனெனில் மாலத்தீவுக்கு இந்தியாவில் இருந்து ஏராளமான ஒரு சுற்றுலா செல்வார்கள். அதுமட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் விரும்பக்கூடிய ஒரு இடமாகும். இங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நிலையில் தற்போது மாலத்தீவு அதிபர் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அதாவது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காசாவில் கொல்லப்படுகிறார்கள். இதன் காரணமாக இனி இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடைய பாஸ்போர்ட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.