இன்றைய உலகில் தொழிலாளர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியை முடித்து வீட்டுக்கு வந்த பிறகும் அலுவலக வேலைகளை திரும்ப பார்ப்பது ஆங்காங்கே காணப்படுகிறது. அதோடு மேலதிகாரிகள் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு தகவல்கள் குறித்து பேசுவது உண்டு. இதனால் இரவு நேரத்திலும்,வார இறுதி நாட்களிலும் வேலையை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதால் குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரான்ஸ், பெயின், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தை இயற்றியுள்ளனர். அது என்னவென்றால், வேலை முடிந்த பிறகும் தொழிலாளர்களை அலுவலகம் தொடர்பு செய்தால் அந்த அழைப்பை துண்டிக்கலாம் என்னும் உரிமையை வழங்கிய இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் அதனை சற்று திருத்தம் செய்துள்ளனர்.

அதாவது மேலதிகாரிகள், தொழிலாளர்களை தொடர்பு கொள்ளும்போது அதன் நியாயமற்ற காரணமாக இருந்தால் அழைப்பை நிராகரிக்கலாம் என்றும், நியாயமான காரணமாக இருந்தால் அந்த அழைப்புக்கு பதில் கொடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் ஆஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணையத்திடம் புகார் கொடுக்கலாம் என பசுமை கட்சி கூறியுள்ளது. மேலும் தொழிலாளர்களின் உரிமையை காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய சட்ட திருத்தம் வரும் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.