
தமிழகத்தில் நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரியான எடையுடன் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பொருட்களின் தரம் மற்றும் எடை ஆகியவற்றை சரிபார்த்த பிறகு அதனை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். பொது விநியோகத் திட்ட பொருட்களை நகர்வு செய்யும் ஒவ்வொரு வாகனத்துடனும் 60 கிலோ எடை சரி பார்க்கக்கூடிய மின்னணு தராசு இருக்க வேண்டும்.
நியாயவிலை கடைகளில் பொருட்களை இறக்கும் போது அதனை மறு எடையிட்டு பணியாளர்களின் ஒப்புதலை பெற வேண்டும். இது தொடர்பான உரிய அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் பொது விநியோகத் திட்ட நகர்ப்பு பணிகளை எந்தவித புகார்களுக்கும் இடம் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.