விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த வருடம் அக்டோபர் மாதம் எட்டாவது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதில் முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வானார். அவருக்கு வெற்றி கோப்பையுடன் 40,50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது . இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் திருமணம் திரும்பு திசை எல்லாம் கண்ணில் தென்படுவது என்னவென்றால் கிப்லி பாணியிலான புகைப்படங்கள். இது குறித்து முத்துக்குமரன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதாவது ஜப்பானிய பாரம்பரிய கலாச்சாரம் பசுமையான சுற்றுச்சூழல் அம்சங்களை உள்ளடக்கி கையால் வரையப்படும் அனிமேஷன் காட்சி அமைப்புதான் கிப்லி. உண்மையில் ஒரு பட்டு சேலை நெசவு செய்வது போல பல்வேறு நுணுக்கமான வேலைபாடுகளைக் கொண்டது. ஆனால் தற்போது தட்டும் வேகத்தில் நம் முன்னே அந்த  கிப்லி பாணியிலான புகைப்படங்களை கொடுத்து வருகிறது AI. இதற்கு ஒரு சிலர் ஆதரவளித்தாலும் ஒரு சிலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

1985 ஆம் வருடம் ஜப்பானில்  ஹயாவோ மியாசாககி, இசாவோ தகஹாடா  மற்றும் தோஷியோ சுஸுகி ஆகியோர் இணைந்து இந்த ஜிப்லி  ஸ்டூடியோவை நிறுவினார்கள். ஒரு பிரத்யேக கலை மூலமாக ஜெனரேட் செய்வது உண்மையிலேயே மியாசகி சொல்வது போல “கிராண்ட் இன்சல்ட் தான்” இது ஒரு கலை திருட்டு. எனவே இனி இந்த கிப்லி வேண்டாமே என்று முத்துக்குமரன் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.