
இந்தியாவின் தற்போது அரசு ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு மொத்தம் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்கிய அரசு புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதன்படி இவர்களுக்கு 180 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்படும். இந்த சலுகையானது 2 குழந்தைகளுக்கும் குறைவாக இருந்தால் மட்டும்தான் வழங்கப்படும். ஒருவேளை குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகைத்தாய் அரசு ஊழியராக இருந்தால் அவருக்கும் 180 நாட்கள் விடுமுறை என்பது வழங்கப்படும். மேலும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்தால் குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள் 15 நாட்கள் அரசு ஆண் ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படும்.