
இந்தியாவில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 18 தவணைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ள நிலையில் 19வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் நிதி உதவி பெற முடியாது. சிலருக்கு நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் தகுதியற்றவர்கள் என்று அரசால் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கப்பட மாட்டாது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வாங்கிய பணத்தையும் விவசாயிகள் திருப்பித் தர வேண்டிருக்கும். பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நிதி உதவி பெற வேண்டும் என்றால் பி எம் கிசான் கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை முடிப்பது அவசியமாகும். அதனை செய்ய தவறினால் அடுத்த தவணைத் தொகை 2000 ரூபாய் வங்கி கணக்கில் வராமல் போகலாம். சிறு குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பி எம் கிசான் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலரும் பயனடைந்து வருகின்றனர். எனவே இதுவரை பயனடைந்த விவசாயிகள் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற வேண்டும் என்றால் கேஒய்சி அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.