
ஸ்மார்ட் போனில் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற அழைப்புகளை தவிர்ப்பதற்காக உதவும் வகையில் தனிப்பயனாக்க கூடிய AI Assistant அம்சத்தை இந்தியாவில் true caller தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் அழைப்புகளுக்கு பதில் அளிப்பது மற்றும் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு உதவுவதுதான் இதன் சிறப்பு அம்சம். இந்த சேவை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும். முதலில் ட்ரூ காலர் செயலியை பதிவிறக்கம் செய்து அசிஸ்டன்ட்டை உடனே பயன்படுத்த தொடங்கலாம். நீங்கள் இந்த செயலியை பதிவிறக்க இருந்தால் அதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் அசிஸ்டன்ட்டை பயன்படுத்த முடியும்.
ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை தவிர்க்க இது உதவுகின்றது. ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு 14 நாள் இலவச சேவையில் இது கிடைக்கின்றது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த சேவை கிடைக்கும். நீங்கள் அழைப்பை பெறும்போது அசிஸ்டன்ட் என்ற ஆப்ஷனை தட்ட வேண்டும். நீங்கள் தொலைபேசியில் இருந்து விலகி இருந்தால் சில ரிங்குகளுக்கு பிறகு AI Assistant தானாகவே அழைப்பிற்கு பதில் அளித்து விடும். மேலும் இந்த அம்சம் அழைப்பாளர்களை வரவேற்கிறது. நபரின் அடையாளத்தையும் அழைப்பிற்கான காரணத்தையும் அடையாளம் காண மேம்பட்ட பேச்சு முதல் உரை தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவுகிறது.
நிகழ் நேர விவரங்கள் பெறுநருக்கு கிடைக்கும். பயனர்கள் ஆண் மற்றும் பெண் என மொத்தம் ஐந்து வெவ்வேறு குரல்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். Speech to text- இது அழைப்பவரின் செய்தியை முறையாக மாற்றுகிறது. உரையாடலை கேட்க தேவையில்லாமல் அழைப்பின் நோக்கத்தை பயனர்கள் எளிதாக படிக்க முடியும். இது ஆங்கிலம், இந்தி மற்றும் பல பிராந்திய மொழிகளை புரிந்து கொள்ளும் எனவும்