
சமீபகாலமாகவே உணவு பாதுகாப்பு துறை மக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உணவுப் பொருள் பொட்டலங்களில் உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவுகளை பெரிய எழுத்துகளில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று FSSAI உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுக்க உதவுவதற்காக உள்ளீடுகளின் அளவுகள் குறிப்பதை கட்டாயமாக்கும் வகையில் சத்து விவர குறிப்பீட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.