மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலமாக கடந்த 150 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்த பழைய சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வருகிறது. இந்த புதிய சட்டங்களில் பல முக்கிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட IPC, CrPC, IEC ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அதிநியம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக பழைய சட்டங்களில் குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். ஆனால் தற்போதைய புதிய சட்டங்கள் மூலம் எந்த காவல் நிலையத்திலும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜீரோ எஃப் ஐ ஆர் என்று சொல்லப்படுகிறது