சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணியானது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 43வது ஓவரிலேயே அபாரமாக வெற்றி அடைந்தது. அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக வைத்திருக்கிறது. இன்று நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியை வெற்றி பெறும் பட்சத்தில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா- நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கும் முன்னேறும்.

இதனால் இன்றைய போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்திய அணியிலிருந்து பெரிய குறை என்னவென்றால் மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறுவது மற்றும் மிடில் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதுதான். இந்த பிரச்சனையை முதல் 2 போட்டிகளில் இந்திய அணி சரி செய்து விட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா சொதப்பியதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்படாதது  தான். ஆனால் தற்போது இந்த குறையை சரி செய்திருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா அபராமான வெற்றி பெற வாய்ப்புள்ளது