
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவார். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடம் பேசினார். அப்போது இ சஞ்சீவனி மூலம் 10 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.
இது ஏழைகள் உயிர் காக்கும் செயலியாக மாறியுள்ளது என்றார். அதன் பிறகு பிளாஸ்டிக் பைகளுக்கு மக்கள் Bye Bye சொல்ல வேண்டும் என்று கூறினார். மேலும் மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும் என்று கூறினார்.