பிரபல கூகுள் நிறுவனம் google போட்டோஸ் செயலியில் சில மேம்படுத்தப்பட்ட வசதிகளை அப்டேட் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி புதிதாக வீடியோ எடிட் செய்யும் வசதியை எளிமையாக்கி உள்ளது. அதோடு ஏஐ சார்ந்த பிரீ செட் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு google போட்டோஸ் செயலியில் updated trim toll, auto enhance button, speed tool போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோக ஏஐ சார்ந்த அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எடிட்டிங்கில் லைட்டிங் அட்ஜஸ்ட், ஸ்பீடு கண்ட்ரோல் வீடியோக்களை மேம்படுத்துதல், எபக்ட்டுகள் வழங்குதல் உள்ளிட்ட புதிய அப்டேட் பல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அப்டேட்டுகள் வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.