கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. எதிர் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக அரசை சாடி வந்தார்கள். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில் ஏற்கனவே உள்ள தண்டனை போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். விற்பனை செய்பவர்களின் அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்று சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.