மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் 1.25 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்கள் மிகவும் பயன் அடைகிறார்கள். வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு இருப்பதால் தண்ணீருக்கான சிரமம் குறையும். இந்நிலையில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதற்காக பொதுமக்களிடம் கட்டண வசூலிக்க வேண்டும் என்று அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

இந்த குடிநீர் குழாய்கள் மூலம் தினசரி ஒரு நபருக்கு சராசரியாக 55 லி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதற்காக ஒரு இணைப்புக்கு மாதம் ரூ.30 கட்டணம் வசூலிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதன்படி தமிழக ஊரக வளர்ச்சித் துறை குடிநீர் இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.