
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது “டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பேசினார். அதிலும் குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவது உறுதிசெய்யப்பட்டால் அந்த ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்படுவார் எனவும் எம்ஆர்பி விலைக்கு மட்டுமே விற்பனை செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் மதுக்கடை பணியாளர்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டு வருகிறோம். அவர்கள் சொல்லும் பிரச்சனைக்கு தீர்வுக்காண நடவடிக்கை மேற்கொள்ளபடும். அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன். எனவே ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுக்காணப்படும்” என அவர் பேசினார்.