திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு  எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கிய நேரத்தில் ஒரு கருத்தை சொன்னார். கொட்டும் மழையில் வீசுகின்ற புயலில் சரளை கற்கள் நிரப்பிய மலை உச்சியை நோக்கி நாம் நடக்கின்றோம். கையிலே ஒரு அகல் விளக்கு அந்த அகல் விளக்கு அணையாமல் இருப்பதற்கு தமிழர்களே வாருங்கள், உங்களுடைய கரத்தை காட்டுங்கள் என்று சொன்னார்.

திமுக தொடங்கப்பட்ட போது அந்த அகல் விளக்கை காப்பாற்ற வாருங்கள் தமிழர்களே என்று அழைத்தார். நாங்கள் அமைச்சர்களாக கட்சியிலும் ஆட்சிப் பொறுப்பிலும் விளங்குவதற்கு முக்கிய காரணம் அண்ணன் திருநாவுக்கரசு போன்றவர்களுடைய இந்த கடின உழைப்பும் கொள்கை மட்டும் தான். இன்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் மொழியால் நாட்டை துண்டாட பார்க்கிறார். எங்களோடு உணர்வில், உயர்வில் என எல்லாவற்றிலும் கலந்து தாய் மொழியாக இருக்கின்ற தமிழால் நாங்கள் இருக்கின்றோம். இன்னும் நீங்கள் பேசினால் இந்த மேடையில் இருந்து சொல்கிறேன் கோ பேக் மோடி என்று சொன்னோம். துணை முதல்வர் சொன்னார் கெட் அவுட் மோடி. நாடாளுமன்றத்தில் விரைவில் சொல்லுவோம் ஷட் அப் மோடி என்று என ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.