
கர்நாடக மாநிலத்தில் சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் வண்ணப்பொடிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகிய உணவுகளுக்கு கலர் பொடி பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது சிக்கன் கபாப் மற்றும் மீன் வருவல், சிக்கன் துண்டுகள் பொறிப்பது போன்றவைகளின் போது கலர் பொடியை பயன்படுத்துவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீன் வருவல் மற்றும் சிக்கன் கபாப் போன்ற உணவுகளில் கலர் பொடி பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் தடையை மீறி அதனை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.