தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்களை அதிகப்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 254 மெஷின்கள் கூடுதலாக வாங்கப்பட இருக்கிறது. தற்போது தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் 96 தானியங்கி மிஷின்கள் பயன்பாட்டில் இருக்கிறது. பெரும்பாலும் புறநகர் ரயில் சேவைகளில் கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என தினந்தோறும் கூட்டம் அதிகமாக இருப்பதால் டிக்கெட் கவுண்டரில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தான் தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின் அமைக்கப்பட்டது.

ஆனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தானியங்கி டிக்கெட் மெஷின் சேவையை அதிகரிக்க தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சென்னைக்கு 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதுரைக்கு 46 மெஷின்களும், திருச்சிக்கு 12 மெஷின்களும், திருவனந்தபுரத்துக்கு 50 மெஷின்களும், பாலக்காடுக்கு 38 மெஷின்களும், சேலத்துக்கு 12 மெஷின் வரும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் டிக்கெட் கவுண்டரில் பயணிகளின் கூட்டம் குறையும் என்பதால் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.