இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதில் தொலைதூர விரைவு ரயில் பயணங்களுக்கு முன்பதிவு கட்டணம் அவசியமாக உள்ளது. பலரும் தட்கல் முறையில் டிக்கெட் பெறலாம் என்று பார்த்தால் அதிலும் மிக சொற்பமான அளவில் மட்டுமே கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்கின்றது. ஒரு சில வழித்தடங்களில் ரயில் முன் பதிவு டிக்கெட் பெறுவதற்கு மிகவும் சிரமம் உள்ளவர்கள் ஒரு எளிமையான வசதியை பயன்படுத்தி அதன் மூலமாக கன்ஃபார்ம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

உதாரணமாக திருச்சியில் இருந்து விருதாச்சலம் செல்ல நீங்கள் விரும்பினால் விருதாச்சலத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஸ்டேஷன் ஆன விழுப்புரத்திற்கு டிக்கெட் இருக்கிறது என்றால் விழுப்புரம் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். எதற்காக நீங்கள் செலுத்தும் கூடுதல் கட்டணம் தட்கல் கட்டணத்தை விட பெரும்பாலும் குறைவாகத்தான் இருக்கும். முன்னணி வழித்தடங்களில் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் டிக்கெட் போட்டா அளவு மாறுபடும். எனவே உங்கள் வழித்தடத்தில் இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.