
தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது குழந்தை பிறந்த முதல் மாதம் தொடங்கி 16 தவணை தடுப்பூசியை விலையின்றி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான விலையில்லா இலவச தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.