இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர அனைத்துமே மாறிவிட்டது. அதன்படி ஒவ்வொரு துறையிலும் AI தொழில்நுட்பம் உள்புகுந்துள்ளது. இந்நிலையில் தேர்வு செயல்முறையை வலுப்படுத்துவதற்காக UPSC முக அங்கீகாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் CCTVயுடன் கூடிய கண்காணிப்பு அமைப்பை அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் கேமராக்கள் ஆஃப்லைனில் சென்றாலோ, சந்தேகத்திற்கிடமான அசைவுகள் எதுவும் நடந்தாலோ அல்லது நேரத்திற்கு அப்பால் கண்காணிப்பாளர் இருந்தாலோ இந்த அமைப்பானது அதிகாரிகளை எச்சரிக்கை செய்யும். யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 14 முக்கியமான தேர்வுகளை நடத்துகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 26 லட்சம் பேர் தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.