பொதுவாக ஒரு காலத்தில் மது கடைக்கு செல்ல வேண்டும் என்றால் பயந்து பயந்து செல்வார்கள். ஏதோ திருட்டுத்தனமாக வாங்கி வருவது போல் மதுவை வாங்கி வருவார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. மது குடிப்பதை பெருமையாக நினைத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். தற்போது ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றாலே மது இல்லாமல் இல்லை என்பது போல் ஆகிவிட்ட நிலையில் திருமண நிகழ்ச்சிகளிலும் மது குடிக்கிறார்கள். இதோடு டிஜே இசை நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த ஒரு கிராமம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலத்தில் பல்லோ என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் மது விருந்து இல்லாமல் டிஜே இசை நிகழ்ச்சியில் நடத்தாமலும் இருக்க வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றி திருமணம் நடத்துபவர்களுக்கு 21,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மது விருந்தும் மற்றும் டிஜே இசை நிகழ்ச்சிகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால் இப்படி ஒரு உத்தரவு வெளியாகியுள்ளது.