இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் வசதிக்காக புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் பயனர்கள் தங்களுடைய நாக்கை மட்டுமே பயன்படுத்தி  ஸ்க்ரீன் லாக்கை ஓபன் செய்யும் வசதியானது விரைவில் வர இருக்கிறது.

மவுத்பேட், வாயின் மேற்கூரையில் அமர்ந்திருக்கும் தக்கவைப்பு போன்ற டிராக்பேட் சிப் இதை செய்யும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நாக்கினுடைய அசைவுகளை உணரக்கூடிய விதமாக  சென்சார்களை உருவாக்கி வருகிறார்கள். அதன் மூலம் பயனர்களை ஸ்வைப் அல்லது கிளிக் செய்வதன் மூலம் ஸ்க்ரோல் செய்யவும், தட்டச்சு செய்யவும், அழைப்புகளைச் செய்யவும் மற்றும் செஸ் விளையாடவும் முடியும்.