தமிழக வெற்றி கழகத்தில் தகவல் நுட்ப நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக கட்சி கழக தலைவர் விஜய் வீடியோ ரெக்கார்ட் மூலம் பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது.

அதில் எல்லாரும் எப்படி இருக்கீங்க. மீட்டிங் நடக்கும்போதே உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கொஞ்சம் நெட்வொர்க் ப்ராப்ளம். அதனால் என்னால் அப்படி செய்ய முடியவில்லை.

வீடியோ ரெக்கார்ட் செய்து அனுப்பி இருக்கிறேன். உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நம்முடைய இந்த சோசியல் மீடியா படையைத்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படையாக சொல்கிறார்கள்.

இனிமேல் நீங்க எல்லாரும் சோசியல் மீடியா ஃபேன்ஸ் மட்டும் கிடையாது. என்ன பொறுத்த வரைக்கும் நீங்க எல்லாரும் நம் கட்சியுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ். இப்படித்தான் உங்க எல்லாரையும் கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தமிழகவற்றை கழகத்தின் ஐடி விங் என்று சொன்னாலே கண்ணியத்தோடு நடந்து கொள்பவர்கள் என்று எல்லோரும் சொல்ல வேண்டும். அந்த மாதிரி நீங்க நடந்து கொள்ள வேண்டும். கூடிய விரைவில் உங்களை நான் பார்க்க வருவேன். அதுவரைக்கும் உங்க எல்லோருக்கும் என்னுடைய ஆல் தி பெஸ்ட் வெற்றி நிச்சயம் என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.