தமிழக அரசு ஆன்லைன் மூலம் பட்டா பெறுவதற்கு செல்போன் நம்பர் கட்டாயம் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு e services என்ற ஆன்லைன் தளம் செயல்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் இலவசமாக ஆவணங்களை பெறும் சிலர் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதன் காரணமாக ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டா மற்றும் பட்டா நகல் போன்றவைகளை பெறுவதற்கு செல்போன் நம்பர் அவசியம் என தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.