
கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்பி தருமர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இணைய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் ஹைதராபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு மண்டல அலுவலகங்களில் சிப் பொருத்தப்பட்டு இ பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .
இது பல பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இந்த சேவையானது விரிவுபடுத்தப்படும். சென்னையில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதலில் சிப் பொருத்தப்பட்ட இ- பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது விமான நிலையத்தில் உள்ள இமிகிரேஷன் கவுண்டர்களில் பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக இந்த புதிய சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.